சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக உலகளவிலான தரவரிசையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம்.

கடந்த 13 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக இந்தியா பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பது, போட்டித் திறனை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக உலகளவிலான தரவரிசையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 82-வது இடத்திலிருந்து 57-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டில் வர்த்தகத்திற்கான சந்தை வாய்ப்புகள் தொடர்பான செயல்திறன் குறியீட்டின் அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் கட்டமைப்பு, போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. புதுதில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையம், இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் வணிகம், முதலீட்டு சட்ட மையம் மற்றும் போட்டிக்கொள்கைகளுக்கான அறக்கட்டளையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மாறிவரும் புவிசார் சூழலுக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Leave a Reply