ஜப்பான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.இந்தியா – ஜப்பான் இடையேயான கொள்கைகளை செயல்படுத்துவது தொடர்பாக, இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேயின் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.இந்திய பசிபிக் மண்டலத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா – ஜப்பான் இடையிலான நட்புறவு வலுப்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்
