மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள், தொடக்க விழா நிகழ்வுகள், விளம்பரம், வரவேற்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply