பால் ஏற்றி சென்ற வேன் சாலையில் கவிழ்ந்தது!-திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானம் அருகே நடந்த விபரீதம்.

பால் ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, இன்று (07/07/2022) மாலை 5 மணி அளவில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானம் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வேன் கவிழந்த இடத்தில் மணல் லாரி ஒன்றும் நின்றுக்கொண்டிருந்தது.

அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் கொடுத்த தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாநகர போலீசார், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், சாலையில் கவிழ்ந்து கிடந்த பால் ஏற்றி வந்த அந்த வாகனத்தை, மீட்பு வாகனத்தின் உதவியுடன் அங்கிருந்து பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தினர்.

விபத்துக்குள்ளான அந்த வேன் “வேதா பால்” நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவருகிறது. இந்த வேதா பால் உற்பத்தி நிறுவனம், முசிறி வட்டம், தொட்டியப்பட்டி, சிவந்த லிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இநநிறுவனத்தின் கிளைகள் திருச்சி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ளது. திருச்சி திருவானைக்கோவில் பகுதியில் அமைந்துள்ள வேதா பால் நிறுவனத்தின் கிடங்கில் இருந்து பால் ஏற்றி வந்த வேன்தான் தற்போது விபத்துக்குள்ளானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து திருச்சி மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுபோன்ற முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/07/04/75328/

Leave a Reply