பிரதமரின் ஆலோசனையின்படி, அரசியலமைப்பின் பிரிவு 75 இன் பிரிவு (2) இன் கீழ் (under clause (2) of Article 75 of the Constitution) மத்திய மந்திரி சபையில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோரின் ராஜினாமாவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.
மேலும், பிரதமரின் ஆலோசனையின்படி, கேபினட் அமைச்சரான ஸ்மிருதி ஜூபின் இரானிக்கு, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் பொறுப்பும் , அதே போல் கேபினட் அமைச்சரான ஜோதிராதித்ய எம். சிந்தியாவுக்கு, தற்போதுள்ள இலாகாவுக்கு மேலதிகமாக, எஃகு அமைச்சகத்தின் பொறுப்பையும் ஒதுக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
