ஈரான் எல்லை பாலைவனத்தில் அனாதையாக நின்ற ஆப்கானிஸ்தான் குழந்தை!-சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Afghan orphan child in the Iran border desert.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், எப்படியாவது அந்நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் எல்லை பாலைவனத்தில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குழந்தை ஒன்று அனாதையாக சுற்றித்திரிவதைக் கண்ட ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர்; மனிதாபிமான அடிப்படையில் அக்குழந்தையை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த மோதல்களில் தனது பெற்றோரை இழந்து தன்னம் தனியாக ஈரானிய பாலைவன எல்லையை இக்குழந்தை அடைந்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.

ஈரான் இராணுவத்தின் 65 -வது சிறப்பு வான்வழிப் படையணியின் வீரர் ஒருவர்; இக்குழந்தை மீட்டு ஈரானுக்கு அழைத்து வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

ஆப்கானிஸ்தான் குறித்த முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ”கிளிக்” செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/08/17/60634/

http://www.ullatchithagaval.com/2021/08/27/60990/

Leave a Reply