Chairman and Managing Director
CEO
சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India), இந்தியாவில் மகாராட்டிரா மாநிலம், புனே நகரத்தில் செயல்படும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஆகும். இத்தனியார் மருந்து நிறுவனம் சைரஸ் எஸ். பூனேவாலா எனும் பார்சி நபரால் 1966-இல் துவக்கப்பட்டது. இந்நிறுவனம் பூனேவாலே முதலீடு மற்றும் தொழில்கள் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரியாக அதர் பூனேவாலா உள்ளார்.
இந்நிறுவனம் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் உலகின் பெரிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஆண்டுக்கு 130 கோடி (1.3 பில்லியன்) டோஸ் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் காச நோய்க்கு காசநோய்த் தடுப்பூசி மருந்து, இளம் பிள்ளை வாதம் நோய்க்கு தடுப்பூசி மருந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் மற்றும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்களுக்கான விஷ முறிவு மருந்துகள் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் 2009-ல் இருந்து ‘எச்1.என்1 ‘ சளிக்காய்ச்சல் எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கான மருந்தை உற்பத்தி செய்கிறது. 2016-ல் ஐக்கிய அமெரிக்காவின் மசாசூட்ஸ் மருத்துவப் பள்ளியின் ஆதரவுடன் இணைந்து, பாம்பு மற்றும் நாய்க்கடிகளுக்கு, வெகு விரைவில் நஞ்சு முறிவு மருந்தை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் கூட்டாக, அஸ்டிரா ஜெனிக்கா நிறுவனத்துடன் (AstraZeneca) இணைந்து ‘கோவிஷீல்டு (COVISHIELD)‘ எனும் பெயரில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகிறது. இந்நிறுவனம் 10 கோடி (100 மில்லியன்) கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ரூ. 225-க்கு விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை நவம்பர் 28-ந்தேதி பிரதமர் நரேந்திரமோதி நேரில் சென்றுப் பார்வையிட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் டிசம்பர் 6-ந்தேதி விண்ணப்பித்து இருந்தது. ஆனால், இதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு அனுமதி மறுத்துள்ளது.
அதே போல், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற நிறுவனம் கோவாக்சின் (Covaxin) என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியைக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் மூன்றாம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிறுவனத்தையும் பிரதமர் நரேந்திரமோதி நேரில் சென்றுப் பார்வையிட்டுள்ளார்.
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது, இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது மருந்து கண்டுபிடிப்பு, மருந்து மேம்பாடு, தடுப்பூசிகளின் உற்பத்தி, உயிர் சிகிச்சை, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக டாக்டர் கிருஷ்ணா எல்ல உள்ளார்.
ஜூலை 2020 நிலவரப்படி, இந்நிறுவனம் 700 -க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது மற்றும் உலகளவில் தனக்கென்று ஒரு இருப்பை இந்நிறுவனம் தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கோரிக்கையை, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு மறுத்துள்ளதை, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.இராஜமாணிக்கம் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எந்த ஒரு நோய்க்கான தடுப்பு மருந்தும் 100 சதவீதம் பாதுகாப்பானது என்ற உறுதியை எந்த நிறுவனமும் அளிக்க முடியாது என்றாலும், மனித உயிர்களுக்கு பயன்படுத்தும் அந்த மருந்து எந்த நோக்கத்திற்காக கண்டுப்பிடிக்கப்பட்டதோ அதற்கு 100 சதவீதம் பயன் உள்ளதாக இருக்க வேண்டும். அதேசமயம், அந்த மருந்து மனிதர்களுக்கு பயன்படுத்தும்போது தீமைகள் குறைவாகவும்; அவற்றின் நன்மைகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். இதுதான் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமான நடைமுறையாகும். இதைதான் கொரோனா வைரஸ் தடுப்பூசி விசியத்திலும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு எதிர்பார்க்கிறது. இதில் எந்த தவறும் இல்லை.
உலகத்தையே ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு தரமான, பாதுகாப்பான தடுப்பு மருந்து கிடைக்கும் அந்த நல்ல தருணத்திற்காக மக்களும், மருத்துவ உலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது..!
இதற்கு விரைவில் மகிழ்சியான விடைக் கிடைக்கும் என்று நாமும் முழுமையாக நம்புவோம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
