மோதல் முற்றுகிறது…!- திமுக -காங்கிரஸ் உறவில் விரிசல்!-காங்கிரஸ் தலைவரின் அறிக்கையும், துரைமுருகனின் பேட்டியும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

‘நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பதவி வழங்காமல், கூட்டணி தர்மத்திற்கு விரோதமாக திமுக செயல்பட்டுள்ளது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி போனால் போகட்டும். எங்களுக்கு அதனால் நஷ்டமில்லை. அதைப்பற்றி கவலைப்படபோவதும் இல்லை. அவர்களுக்கு ஓட்டே கிடையாது, இருந்தால்தானே கவலைப்படுவதற்கு அதனால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இது திமுக பொருளாளர் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்தா? (அல்லது) திமுக தலைமையின் விருப்பமா? -இதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

One Response

  1. MANIMARAN January 16, 2020 7:08 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply