திருச்சி தொட்டியம் அருகே கிணற்றில் விழுந்தவரை காப்பாற்றிய தீயணைப்பு மீட்புத் துறையினர்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஏழூர்பட்டி கிராமத்தில் இன்று (08.08.2019) காலை 11 மணியளவில் கண்ணன் என்பவர் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று எட்டி பார்த்தபோது, எதிர்பாரதவிதமாக ஆழமான கிணற்றில் தவறிவிழுந்தார்.

கிணற்றுக்குள்  இருந்து அலறல் சப்தம் வருவதை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றை நோக்கி ஓடியுள்ளனர். அங்கு கண்ணன் என்பவர் கிணற்றுக்குள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டு, உடனடியாக  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு மீட்புத் துறையினர், கிணற்றுக்குள் தத்தளித்த அந்த நபரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

-பி.தங்கராஜ்.

One Response

  1. குமார் August 8, 2019 8:26 pm

Leave a Reply to குமார் Cancel reply