உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு நிலைமையின் கள மதிப்பீட்டை மேற்கொண்டார் .

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினை 2024, ஏப்ரல் 22 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிட்டு, பாதுகாப்பு நிலைமையின் கள மதிப்பீட்டை மேற்கொண்டார். அதீத வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் நிலைகொண்டுள்ள வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சருடன் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, வடக்குப் பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், 14-வது படைப்பிரிவின் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி ஆகியோர் சென்றிருந்தனர்.

ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், வரவிருக்கும் காலங்களில், தேசப் பாதுகாப்பின் வரலாறு எழுதப்படும் போது, பனி படர்ந்த குளிரில் நமது வீரர்களின் வீரச் செயல்கள், மனஉறுதி ஆகியவை பெருமிதத்துடன் நினைவுகூரப்படும். இது எதிர்கால சந்ததியினருக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும்” என்றார்.

சியாச்சின் ஒரு சாதாரண நிலப்பரப்பு அல்ல; இந்தியாவின் இறையாண்மை மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளம் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். தில்லி, இந்தியாவின் தேசிய தலைநகராகவும் மும்பை நிதித் தலைநகராகவும், பெங்களூரு தொழில்நுட்பத் தலைநகராகவும் இருப்பதைப் போலவே, தைரியம், மனவுறுதி மற்றும் உறுதிப்பாட்டின் தலைநகராக சியாச்சின் உள்ளது.

இந்தப் பயணத்தின் போது, தாய்நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கான சியாச்சின் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பாதுகாப்பு அமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply