காட்டுப்பள்ளி எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் மூன்றாவது கேடட் பயிற்சிக் கப்பலுக்கான இரும்பு வெட்டுதல் நிகழ்வு.

மூன்று தேசிய மாணவர் பயிற்சிக் கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும்  எல் அண்ட் டி நிறுவனம் இடையே மார்ச் 23-ல் இறுதி செய்யப்பட்டது. மூன்றாவது மாணவர் பயிற்சிக் கப்பலுக்கான  எஃகு வெட்டும் விழா காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் 20 ஏப்ரல் 24 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாதுகாப்பு செயலாளர் திரு கிரிதர் அரமனே தலைமை தாங்கினார்எல் அண்ட் டி பிரிசிஷன் இன்ஜினியரிங் சிஸ்டத்தின் செயல் துணைத் தலைவர் திரு அருண் ராம்சந்தானி முன்னிலையில்இந்திய கடற்படையின் பிற மூத்த அதிகாரிகள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கப்பல்கள் தேசிய மாணவர் படை பயிற்சி அலுவலர்களுக்கு கடலில் அடிப்படை பயிற்சிக்குப் பின்னர் கடலில் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும். இந்தக் கப்பல்கள் நட்பு நாடுகளைச் சேர்ந்த கேடட்களுக்கு பயிற்சி வசதிகளை விரிவுபடுத்தும். இந்தக் கப்பல்கள் 2026 செப்டம்பர் வாக்கில்  வழங்கப்பட வாய்ப்புள்ளது. உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை நோக்கிய இந்திய கடற்படையின் முயற்சியில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்மேலும் இது இந்திய அரசின் ‘ தற்சார்பு இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா‘ முன்முயற்சியுடன் ஒத்துப்போகிறது. நீண்டகால ஒருங்கிணைந்த தொலைநோக்குத் திட்டம்  இந்திய கடற்படைக்காக மூன்று கேடட் பயிற்சிக் கப்பல்களை இயக்க வகை செய்கிறது.

திவாஹர்

Leave a Reply