இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு டிஆர்டிஓவால் அமைக்கப்பட்ட முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமான ஸ்பேஸ் கேரளாவில் தொடங்கப்பட்டது .

கேரளாவின் இடுக்கியில் உள்ள குளமாவு நீரடி ஒலி ஆராய்ச்சி அமைப்பில் அதிநவீன நீர்மூழ்கித் தளத்தை (ஸ்பேஸ்) பாதுகாப்புத் துறை செயலாளரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் 2024, ஏப்ரல் 17 அன்று திறந்து வைத்தார். டி.ஆர்.டி.ஓ.வின் கடற்படை இயற்பியல் மற்றும் கடலியல் ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட ஸ்பேஸ், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடற்படை தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லை ஸ்பேஸ் குறிக்கிறது. இது, நீரின் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு தளம், வின்ச் அமைப்புகளைப் பயன்படுத்தி 100 மீட்டர் வரை எந்த ஆழத்திற்கும் இறக்கக்கூடிய நீர்மூழ்கித் தளம் என இரண்டு தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். இதன் மூலம் செயல்பாடுகள் முடிந்ததும், நீர்மூழ்கித் தளத்தை மேலே தூக்கி மிதக்கும் தளத்துடன் இணைக்கலாம்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply