திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ திருவெறும்பூர் ஒன்றிய கிராமப் பகுதிகளில் தீவிர பிரசாரம்!

இந்தியா கூட்டணியில் திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் “தீப்பெட்டி” சின்னத்தில் போட்டியிடும் துரை வைகோ இன்று (ஏப்ரல் 11) மாலை திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, காந்திபுரம், புத்தாபுரம், வேங்கூர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது துரை வைகோவுடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரே ஜீப்பில் சென்று ‘தீப்பெட்டி’ சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply