‘அரசியல் நிலப்பரப்பில் சுகாதார ஆளுகை குறித்த சர்வதேச கருத்தரங்கு .

ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியில் நீதி, சட்டம் மற்றும் சமூகத்திற்கான மையத்துடன் இணைந்து, மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனமான வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், அரசியல் நிலப்பரப்பில் சுகாதார ஆளுகை என்ற சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தொடக்க உரையாற்றி, மருந்துகள் கிடைப்பதன் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்திற்கான உரிமையையும் எடுத்துரைத்தார். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கொள்கை அமலாக்கம் குறித்த தனது அனுபவங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் போது வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்த இந்தியாவின் தலைமையை மேற்கோள் காட்டி, கொள்கை வகுப்பதில், குறிப்பாக சுகாதாரக் கொள்கையில் ஊக்கமளிக்கும் தலைமையின் அவசியத்தை டாக்டர் பால் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந் தொற்றின் போது சுகாதாரம் தொடர்பான அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ஐ பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவின் தொற்று நோய்கள் சட்டம், 1897-ன் குறைபாடுகள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பதையும் டாக்டர் பால் விளக்கினார்.

ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் சி.ராஜ்குமார், தொடக்க உரையாற்றினர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதிபதி ரவீந்திர பட் முதல் அமர்வுக்கு தலைமை தாங்கினார். மருந்து காப்புரிமை தகராறுகளில் தடை உத்தரவு வழங்குவதற்கான அடிப்படையாக பொது நலனின் முக்கியத்துவத்தை நீதிபதி பட் எடுத்துரைத்தார்

திவாஹர்

Leave a Reply