இந்தியா – மொசாம்பிக் – தான்சானியா முத்தரப்பு பயிற்சி-2024.

இந்திய கடற்படைக் கப்பல்கள் திர், சுஜாதா ஆகியவை இந்தியா, மொசாம்பிக் தான்சானியா முத்தரப்பு கடற்பயிற்சியில் பங்கேற்கிறது. இப்பயிற்சி மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. அக்டோபர் 22-ல் நடத்தப்பட்ட முதலாவது முத்தரப்பு பயிற்சியின் போது இந்திய கடற்படைக் கப்பல் தர்காஷ் பங்கேற்றது.

தற்போதைய பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 21 முதல் 24 வரை திட்டமிடப்பட்ட துறைமுக கட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்படை கப்பல்களான திர், சுஜாதா ஆகியவை சான்சிபார் (தான்சானியா) மற்றும் மாபுடோ (மொசாம்பிக்) துறைமுகங்களில் அந்தந்த கடற்படைகளுடன் பயிற்சியில் ஈடுபடும். அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, பறிமுதல் நடைமுறைகள், படகு கையாளுதல், துப்பாக்கிச் சூடும் பயிற்சி ஆகியவை மார்ச் 24 முதல் 27 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply