சிறு தேயிலை விவசாயிகளுடன் எஃப்எஸ்எஸ்ஐ, தேயிலையில் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறித்து கலந்துரையாடல் அமர்வு & திறன் மேம்பாடு கூட்டத்தை நடத்தியது .

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் குன்னூரில் சிறு தேயிலை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் அமர்வுக்கு ஏற்பாடு செய்தது. தேயிலையின் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உற்பத்தியை உறுதி செய்வதற்கும், தேயிலைக்கான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் நல்ல விவசாய நடைமுறைகளின் அடிப்படைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கும் தேயிலை வாரியம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு உணவு மற்றும் வேளாண் சிறப்பு மையம் ஆகியவற்றின் ஆதரவில் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பூச்சிக்கொல்லிகளுக்கான அதிகபட்ச எச்சம் அளவுகள் (எம்.ஆர்.எல்) குறித்த எஃப்எஸ்எஸ்ஐ-ன் அறிவிப்புகள் குறித்தும், பூச்சிக்கொல்லி தெளித்தல் மற்றும் தேயிலை இலை பறித்தல் ஆகியவற்றுக்கு இடையில் பரிந்துரைக்கப்பட்ட நேர இடைவெளியை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பரந்த அளவிலான விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்த அமர்வின் போது, சிறு தேயிலை விவசாயிகளுக்கு எம்.ஆர்.எல்.களில் எஃப்எஸ்எஸ்ஐ விதிமுறைகளை கடைபிடிக்கும் பூச்சிக்கொல்லிகளின் பாதுகாப்பான பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தப்பட்டது.

தமிழ்நாடு சுகாதார செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையர் திரு ஆர்.லால்வேனா, திறன் வளர்ப்பு திட்டத்தை பாராட்டியதோடு, எஸ்.டி.ஜி.க்கள் தங்கள் நடைமுறைகளை மேம்படுத்த உதவுவதில் கவனம் செலுத்தும் இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

நல்ல வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துவதில் சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டியதன் அவசியத்தை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் செயல் இயக்குநர் திருமதி இனோஷி சர்மா எடுத்துரைத்தார்.

70-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்றனர், அதைத் தொடர்ந்து சிறு தேயிலை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் எஃப்எஸ்எஸ்ஐ-யால் பரிந்துரைக்கப்பட்ட எம்.ஆர்.எல்.களுக்கு இணங்குதல் குறித்த பயிற்சி அமர்வு நடைபெற்றது.

தேயிலையின் தரத்தை மேம்படுத்தவும், அதன் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உற்பத்தியை அதிகரிக்கவும், எப்எஸ்எஸ்ஏஐ மற்றும் தொழில்துறை கூட்டாளர்களான சிஐஐ ஃபேஸ் ஆகியவை தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை வளரும் பகுதிகளில் பல்வேறு தொகுப்புகளில் விரிவான திறன் மேம்பாட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளன.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply