தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ் தாஸ் மீனா IAS நியமனம்!

ஷிவ் தாஸ் மீனா IAS

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை நாளை (30.06.2023) ஓய்வு பெற இருக்கும் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (29.06.2023) வெளியிட்டுள்ளார்.

ஷிவ் தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டமும், பின்னர் முதுநிலை பொறியியல் பட்டமும் பெற்றுள்ளார். இந்திய அரசு நடத்தும் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஷிவ் தாஸ் மீனா, 1989-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பதவியேற்றார்.

1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ல் காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியராக பயிற்சியினைத் துவங்கிய ஷிவ் தாஸ் மீனா, கோவில்பட்டி, கோயம்புத்தூர் உதவி ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியராகப் பதவி வகித்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றார்.

சுமார் 33 ஆண்டுக்கால ஆட்சிப் பணியில் மருத்துவப் பணிகள் இயக்குநர், வேளான் துறை ஆணையர், வணிகவரித் துறை ஆணையர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும நிர்வாக இயக்குநர், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளின் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply