சர்வதேச தடகள போட்டியில் மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சாதனை படைத்திருப்பது பாராட்டுக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபு திருமாறன் தங்கம் வென்றது பாராட்டுக்குரியது.

குறிப்பாக விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் தேசிய சாதனையை தகர்த்து தங்கம் வென்றது தான் தனிச்சிறப்பு.
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபு மும்முறை நீளம் தாண்டுதலில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

அதாவது 16 ஆண்டுகளுக்கு முன்பு மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியது தான் சாதனையாக இருந்தது.அந்த சாதனையை தற்போது மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்முறியடித்ததால் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு உலக அளவில்பெருமை சேர்ந்திருக்கிறது.

உலக தடகள் போட்டியில் தங்கம் வென்று, சாதனைப் படைத்ததால் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் உலக அளவில் புகழ் சேர்கிறது.விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் அவர்கள் விளையாட்டில் கொண்ட ஆர்வம், கடின பயிற்சி, தொடர் முயற்சி ஆகியவற்றால் உலக அளவிலான தடகள போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.

அவரது விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோரும் பயிர்சியாளரும் பாராட்டுக்குரியவர்கள், வாழ்த்துக்குரியவர்கள்.
செல்வ பிரவு சர்வதேச அளவில் தடகள போட்டியில் பங்கேற்றதற்கும், தங்கம் வென்றதற்கும், சாதனைப் படைத்ததற்கும் த.மா.கா சார்பில் பாராட்டி, தொடர்ந்து உலக அளவில் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி முன்னேற வாழ்த்துகிறேன்.

மத்திய, மாநில அரசுகள் தடகள போட்டியில் தங்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த விளையாட்டு வீரரை பாராட்டி, பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கி தொடர் விளையாட்டுக்கு உதவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply