மிகச் சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்: ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களின் நிறுவனங்களுக்கான மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதல்வர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply