“பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த, கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பணிபுரிந்துகொண்டு இருக்கும் அரசு அதிகாரி வெட்டி கொலை செய்தது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில் அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. குற்றவாளிகள் துணிச்சலுடன் குற்றங்களை புரிவதற்கும், மக்களிடையே சர்வசாதாரணமாக நடமாடக் கூடிய நிலை தற்பொழது தமிழகத்தில் நிலவுகிறது, இதனால் மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இதுபோல் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது இன்றும் பல தொடர்கதையாகியுள்ளது வேதனைக்குரியது. தற்பொழுது குற்றம் புரிந்துவர்கள் இருண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை இயக்குவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைளை தமிழக அரசும், காவல்துறையும் எடுக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் உத்திரவாதத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். காவல்துறை குற்றம் புரிந்தவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரி திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு வழங்க வேண்டும். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply