போபால் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடைபெறவுள்ள ஸ்டார்ட்அப் மாநாடு தொழில்நுட்ப புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களின் வெற்றி்களை காட்சிப்படுத்தும் – மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

போபாலில் ஜனவரி 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை  நடைபெறவுள்ள இந்திய அறிவியல் திருவிழாவுக்கான  ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த அறிவியல் திருவிழாவில் நடைபெறும் ஸ்டார்ட்அப் மாநாட்டில், சுகாதாரம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட துறைகளில் 300-க்கும் மேற்பட்ட புதுமை தொழில்நுட்பத் தயாரிப்புகளும் அவற்றின் வெற்றி பின்னணிகளும் காட்சிப்படுத்தப்பட்டு எடுத்துரைக்கப்படும் என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பெருமளவில் ஊக்குவிப்பதாகக் கூறினார். 2014-ஆம் நாட்டில் 350 ஸ்டாரட்அப் நிறுவனங்களே இருந்ததாகாகவும், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவற்றின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஸ்டாரட்அப் துறை நாட்டின் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் 100 கோடி டாலருக்கு மேல் மதிப்புக் கொண்ட யூனிகார்ன் நிறுவனங்கள் 107 உள்ளது என்று கூறிய அவர், இவற்றில் 23 நிறுவனங்கள் 2022-ஆம் ஆண்டில் யூனிகார்ன் நிறுவனங்களாக உருவெடுத்தன என்றார்.  2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் சர்வதேச புள்ளி விவர அடிப்படையில், 704 ஸ்டார்ட் அப் யூனிகார்ன் நிறுவனங்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றும் அதற்கு அடுத்தபடியாக சீனாவில் 243 யூனிகார்ன்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவும் இத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

திவாஹர்

Leave a Reply