தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு.

தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு, அருணாச்சல பிரதேசத்தில் லும்லா, ஜார்க்கண்டில் ராம்கர், மேற்கு வங்கத்தில் சாகர்திகி, மகாராஷ்டிராவில் கஸ்பா பேத், சின்ச்வாட் ஆகிய 6 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் 31 (செவ்வாய்) ஜனவரி 2023 அன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 7 (செவ்வாய்) பிப்ரவரி 2023 அன்று கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 8 (புதன்) பிப்ரவரி 2023 அன்று நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 10 (வெள்ளி) பிப்ரவரி 2023 கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 27 (திங்கள்) பிப்ரவரி 2023 அன்று மேற்கொள்ளப்படும்.  வாக்கு எண்ணிக்கை 2 (வியாழன்) மார்ச் 2023 அன்று நடைபெறும்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply