மீன்பிடி படகுகளின் ரேடார் டேம்களின் உட்பகுதிகளை அகற்றி போதைப்பொருட்கள் கடத்தல்!-இலங்கையில் நடக்கும் அட்டூழியம்.

இலங்கை தீவுக்குள் போதைப்பொருள் கடத்தியதாக 02 மீன்பிடி படகுகளுடன் 10 உள்ளூர் நபர்களை இலங்கை கடற்படையினர் இன்று (16/01/2023) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் படி, இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் பல உள்ளூர் மீன்பிடி படகுகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ஜனவரி 05 ஆம் தேதி பேருவளைக்கு அப்பால் சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகிலிருந்து 23 கிலோ மற்றும் 235 கிராம் எடையுள்ள 22 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டன. அந்த போதைப்பொருளுடன் 05 நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்திய படகும் கைது செய்யப்பட்டன.

அந்த நபர்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், மேலும் இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகள் (பதிவு எண். IMUL–A–1888–MTR Kingfisher – 8 மற்றும் IMUL–A–2029–MTR Kingfisher – 3) இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. அந்த இரண்டு மீன்பிடி படகில் இருந்த 10 நபர்கள் இலங்கை கடற்படையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக போதைப் பொருட்களை கடலில் வீசியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

fishing trawlers’ Radar Domes and conceal drugs within.

இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீன்பிடி படகுகளின் ரேடார் டேம்களின் உட்பகுதிகளை அகற்றி போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் புதிய உத்தியை உருவாக்கியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதமும், போதைப்பொருள் கடத்தலும் சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு இலங்கையும் பழியாகி வருகிறது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply