வருடாந்திர பணவீக்க விகிதம் (தோராயமாக) 4.95 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது .

2022 டிசம்பர் மாதத்திற்கான அகில இந்திய மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் வருடாந்திர பணவீக்க விகிதம் (தோராயமாக) 4.95 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, இது 2022 நவம்பரில் 5.85 சதவீதமாக பதிவாகியிருந்தது.

உணவுப் பொருட்கள், தாது எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவு உற்பத்திப் பொருட்கள், ஜவுளி, ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை வீழ்ச்சி 2022 டிசம்பரில் பணவீக்க விகித வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

அனைத்துப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 152.9 ஆகவும், பண வீக்க விகிதம் 8.67 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 152.1, 5.85 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 150.5, 4.95 சதவீதமாகவும் இருந்தது.

முதன்மைப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 181.2 ஆகவும், பண வீக்க விகிதம் 11.17 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 177.7, 5.52 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 172.4, 2.38 சதவீதமாகவும் இருந்தது.

எரிபொருள் மற்றும் மின்சாரத்தில் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 158.0 ஆகவும், பண வீக்க விகிதம் 25.40 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 159.6, 17.35 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 158.0, 18.09 சதவீதமாகவும் இருந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 141.9 ஆகவும், பண வீக்க விகிதம் 4.42 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 141.5, 3.59 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 141.1, 3.37 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப் பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண். 2022 அக்டோபரில் 177.7 ஆகவும், பண வீக்க விகிதம் 6.60 சதவீதமாகவும் இருந்தது. இந்த அளவீடு 2022 நவம்பரில் தோராயமாக முறையே 174.3, 2.17 சதவீதமாகவும், 2022 டிசம்பரில் தோராயமாக முறையே 170.3, 0.65 சதவீதமாகவும் இருந்தது.

மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் வருடாந்தர பணவீக்க விகிதம் சென்ற ஆண்டுடன் ஒப்பிடப்பட்ட சதவீதமாகும்.

எம். பிரபாகரன்

Leave a Reply