தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 150 பிரதிநிதிகளுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்; டாக்டர் பாரதி பிரவீன் பவார் முன்னிலை வகித்தார்.

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் முன்னிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 150 பிரதிநிதிகளுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (05.01.2023) கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, மருத்துவக் கல்லூரிகள், தீவிரப் பங்கேற்பாளர்களாக இருக்கும் போது மட்டுமே மருத்துவக் கல்வி சீர்திருத்தத்திற்கான அரசின் விருப்பமும், தொலைநோக்குப் பார்வையும் நிறைவடையும் என்றார். இந்தச் சூழ்நிலையை உருவாக்க கலந்துரையாடலும், விவாதமும் மிக முக்கியமானது என்று கூறிய அவர், மருத்துவக் கல்வியில் மிகச் சிறந்த தரத்திற்கான இலக்கினை  தேசிய மருத்துவக் கவுன்சிலும், மருத்துவக் கல்லூரிகளும் உகந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.

சிறந்த மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வியை உத்தரவாதப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், 2014-ஆம் ஆண்டு 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு தற்போது 648-ஆக அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மருத்துவக் கல்வியில் முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வருவதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் மருத்துவக் கல்வித் துறைக்கான  அங்கீகாரத்தை  வெளிநாட்டில்  உள்ள இந்திய மருத்துவர்கள் வலுப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இளநிலை பட்டப்படிப்பு நிலையில், மருத்துவக் கல்வி சீர்த்திருத்தத்திற்காக தேசிய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன் முயற்சிகள் இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டன. “ஒரு மாவட்டம், ஒரு மருத்துவக் கல்லூரி” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி கல்லூரிகள் சமஅளவில், பகிர்ந்தளிக்கப்படுவது, யோகா அறிமுகம், குடும்பத் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் கிராமங்களைச் சென்றடைவது, இரு மொழிகளில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் பற்றியும்  எடுத்துரைக்கப்பட்டது.

எம். பிரபாகரன்

Leave a Reply