இந்தியாவில் 2022 டிசம்பர் மாதத்தில் 82.87 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் 2022 டிசம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 10.81 சதவீதம் அதிகரித்து 82.87 மில்லியன் டன் அளவாக இருந்தது. இது 2021 டிசம்பர் மாதத்தில் 74.79 மில்லியன் டன்னாக இருந்தது.

அதே நேரத்தில் 2022 டிசம்பர் மாதத்தில் நிலக்கரி விநியோகம் 5.28 சதவீதம் அதிகரித்து 78.91 மில்லியன் டன்னாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 74.95 மில்லியன் டன்னாக இருந்தது.

 28 நிலக்கரி சுரங்கங்களில் 100 சதவீதத்திற்கும் மேலான உற்பத்தி நடைபெற்றுள்ளன. 4 சுரங்கங்களில் 80 முதல் 100 சதவீதம்  வரையிலான உற்பத்தி நடைபெற்றுள்ளது.

2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 607.97 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை விட 16.39 சதவீதம் அதிகமாகும்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply