பரதீப் துறைமுகம் 2022 டிசம்பர் மாதம் அதிகபட்ச சரக்குகளைக் கையாண்டு சாதனை.

2023 புத்தாண்டு துவங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய துறைமுகங்களைப் பின்னுக்குத்தள்ளி பரதீப் துறைமுகம் டிசம்பர் மாதம்  அதிகபட்சமாக  12.6 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட தனது குழுவினருக்கு, பரதீப் துறைமுகத்தின் தலைவர் திரு பி எல் ஹரானாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து புத்ததாண்டின் ஜனவரி மாதத்தில் 100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டில் இந்த துறைமுகம் 125மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், டிசம்பர் வரையிலான காலகட்டத்திலேயே  மொத்தம் 96.81 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை வெற்றிகரமாக கையாண்டுள்ளது.  முந்தைய நிதியாண்டின் இந்த காலகட்டத்தில் 83.6 மில்லியன் மெட்ரிக் டன்னை பரதீப் துறைமுகம் கையாண்டு இருந்தது.

இந்த துறைமுகத்தின் பணிகளை எளிமையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட  பல்வேறு    நடவடிக்கைகளின் பலனாக கடந்த  நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டு கூடுதலாக 15.5 சதவீதம் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன.

இதேபோல், கடலோர அனல் நிலக்கரியைக் கையாள்வதில்  கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 58.11 சதவீதம்  வளர்ச்சி கண்டுள்ளது.  இது பரதீப் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் மொத்த அளவில் 31.56 சதவீதமாகும். இதன் மூலம் நாட்டின் கடலோர சரக்கு கையாளும் மையமாக பரதீப் துறைமுகம் மாறி வருவதுடன், கடலோர கப்பல் மூலம் அனல் நிலக்கரியை  ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில்  உள்ள மின்கழகங்களுக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளன.

எம். பிரபாகரன்

Leave a Reply