இரத்த தானம் செய்யுங்கள் – உயிர்களை காப்பாற்றுங்கள்’ – ராணுவ தினம்-2023-ஐ நினைவுகூரும் வகையில் ராணுவ வீரர்கள் மற்றும் குடிமக்கள் இரத்த தானம்.

நாட்டின் தென் பகுதியில் நடந்து வரும் தொடர் நிகழ்வுகளுக்கு ஏற்ப, 2023 ராணுவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ அமைப்புகள்/பிரிவுகள் ஆகியவை 24 டிசம்பர் 2022 அன்று மாபெரும் இரத்த தான இயக்கத்தை மேற்கொண்டன. இந்திய ராணுவத்தின் இந்த மனிதாபிமான இயக்கத்தின் மூலம், தானமாக வழங்கப்படும் இரத்தப் பிரிவுகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்காக முக்கிய சிவில் மருத்துவமனைகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

2023, ஜனவரி 15 அன்று வரவிருக்கும் 75வது ராணுவ தினத்தை நினைவுகூரும் வகையில், ‘இரத்த தானம் செய்யுங்கள் – உயிர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ், தன்னார்வ தானம் மூலம் 7,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, 75,000 தன்னார்வலர்களின் தகவல் வங்கி தொகுக்கப்பட்டது.

இந்த இரத்த தான பிரச்சாரம், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், குடிமைப் பாதுகாப்பு பணியாளர்கள், என்சிசி மற்றும் கல்லூரி மாணவர்கள், ராணுவப் பொதுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் தன்னார்வலர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த முகாம்கள் அனைத்து முக்கிய நகரங்களிலும், 10 மாநிலங்களில் உள்ள தொலைதூரப் பகுதிகளிலும் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சென்னை மற்றும் வெல்லிங்டன் போன்ற இடங்களில் இந்த இரத்த தான இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திவாஹர்

Leave a Reply