தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி கட்டண வசூல் மையங்களும் ஃபாஸ் டேக்காக மாற்றம்.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008-ன்படி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிக்கும் ஃபீ-பிளாசா(Fee plaza) எனப்படும் கட்டண வசூலிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கிலோமீட்டர் இடைவெளியில் இந்த கட்டண வசூலிப்பு மையங்கள் இருக்க வேண்டும் என்பது விதி. அதே நேரத்தில் ஏற்கனவே அமலில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 1997-ல் 60 கிலோமீட்டர் இடைவெளி என்ற கட்டுப்பாடுகள் கிடையாது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஃபீ-பிளாசாக்கள் அனைத்தும் ஃபாஸ்ட்–டேக் வசூல் மையங்களாக மாற்றப்பட வேண்டும் என கடந்த 2021ம்ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்த சட்டம் பிப்ரவரி 15ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில், தற்போது  நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரும்பாலான ஃபீ-பிளாசாக்கள் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply