விமானப் போக்குவரத்து மற்றும் விமான உற்பத்தித் துறையில் சுமார் 2,50,000 ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு.

கடந்த 3 வருடங்களில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் உள்நாட்டு வளர்ச்சி வீதம் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. 2019-20-ஆம் ஆண்டில் 275 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். 0.3 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி குறைந்தது. 2020-21-ம் ஆண்டு 105 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். 61.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிக் குறைவாகக் காணப்பட்டது. 2021-22-ம் ஆண்டு  167 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது.

விமானப் போக்குவரத்து மற்றும் விமான உற்பத்தித் துறையில் சுமார் 2,50,000  ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பைலட், விமான சிப்பந்திகள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள்,  விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இதில் அடங்கும்.

அடுத்த 3 ஆண்டுகளில் அகில இந்திய அளவிலான பயணிகள் வீதம் குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் கணித்துள்ளது. அதன்படி, 2023-24-ஆம் ஆண்டு 371  மில்லியன் பேரும், 2024-25 ஆம் ஆண்டு 412 மில்லியன் பேரும் , 2025-26-ஆம் ஆண்டு 453 மில்லியன் பேரும் விமானப்பயணம் மேற்கொள்வார்கள் என்று  தெரிவித்துள்ளது.

வருவாயைப் பொறுத்தவரை கடந்த 2019-20ஆம் ஆண்டில் ரூ.12,837 கோடியும், 2020-21-ஆம் ஆண்டு ரூ.4,867 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் 6,841 கோடியும் கிடைத்துள்ளதாக இந்திய விமானங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தகவலை, மக்களவையில் இன்று விமானப் போக்குவரத்துறை இணை அமைச்சர் ஓய்வு பெற்ற ஜெனரல் வி கே சிங் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply