சுற்றுலாத் தளங்களுக்கான சாலை இணைப்பை அதிகரிப்பதற்கான தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரித்து மேம்படுத்துவது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முக்கியப் பொறுப்பாகும். இதனை சிறப்பாக செய்து வரும் அமைச்சகம் சுற்றுலாத் தளங்களை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதற்காக பல்வேறு வசதிகள் போதுமான சமிக்ஞை பலகைகள், சாலையோரத் தடுப்பு மற்றும் அழகுப்படுத்துதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.மேலும், போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் 28 நகரங்களில் வட்டச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த இடங்களைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை அமைச்சகம் செய்து வருகிறதுஃ மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply