இந்திய வரலாற்று ஆவணங்கள் குழுவின் 63-வது அமர்வு.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய வரலாற்று ஆவணங்கள் குழுவின் 63-வது அமர்வு டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு தயா சங்கர் சிங் இந்த அமர்வைத் தொடங்கி வைப்பார். “சுதந்திரத்தின் நீண்ட வரலாறு: அறிந்த மற்றும் அதிகம் அறியப்படாத போராட்டங்கள்” என்ற தலைப்பிலான கண்காட்சியையும் அமைச்சர் திறந்து வைப்பார்.

இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தலைமை இயக்குநரும், இந்திய வரலாற்று ஆவணங்கள் குழுவின் செயலாளருமான திரு சந்தன் சின்ஹா ஆவண காப்பகங்களின் வளர்ச்சி குறித்த அறிக்கையை விளக்குவார். இந்திய வரலாற்றில் 1600-க்குப் பிந்தைய உண்மையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மொத்தம் 24 ஆய்வுக் கட்டுரைகளை  அறிஞர்கள் இந்த இரண்டு நாள் அமர்வின் போது சமர்ப்பிப்பார்கள்.

எம்.பிரபாகரன்

Leave a Reply