மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை வழங்குகிறார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை டிசம்பர் 3, 2022 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்துள்ள ‘சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்’ தொடர்பான நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு வழங்குகிறார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் விழாவிற்கு தலைமை வகிக்கிறார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு. ராம்தாஸ் அத்வாலே, திரு ஏ. நாராயணசாமி மற்றும் திருமதி பிரதிமா பௌமிக் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன.

2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு மொத்தம் 844 விண்ணப்பங்களும் 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு மொத்தம் 1210 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விண்ணப்பங்கள் துறையால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply