அரசு கட்டிடம் இல்லாததால் கண்டெய்னரால் செய்யப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள்!-குஜராத் மாநில தேர்தல் விநோதங்கள்..!

குஜராத் மாநிலத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று (01/12/2022) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம், பருச் மாவட்டம், வக்ரா தாலுகாவில் அமைந்துள்ள அலியாபெட் கிராமத்தில் வாக்கு சாவடி அமைப்பதற்கு அரசு கட்டிடம் எதுவும் இல்லாததால் கடந்த காலங்களில் அந்த கிராம மக்கள் வாக்களிக்க வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில் ஷிப்பிங் கண்டெய்னரால் செய்யப்பட்ட வாக்குச்சாவடி ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்துக் கொடுத்தது. இதில் அப்பகுதி வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 27.07 கோடி ரொக்கமும், 411851.23 லிட்டர் மதுவும், 61.96 கோடி மதிப்புள்ள போதை மருந்தும், 15.79 கோடி மதிப்புள்ள உலோகப் பொருட்களும், 171.24 கோடி மதிப்புள்ள இலவசப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதோ அதற்கான ஆதாரம்:

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply