உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது!- பிரதமர் நரேந்திர மோதி.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இருமடங்குக்கும் அதிகமாகி இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 7 மாதங்களுக்குள் மொபைல் ஃபோன் ஏற்றுமதி 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது.  இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்த 2.2 பில்லியன் டாலரை அளவை விட  இருமடங்குக்கும் அதிகம்.

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது”.

எம். பிரபாகரன்

Leave a Reply