உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பி்ன் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டதினவிழாவில்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

1949ஆம் ஆண்டு அரசியலமைப்பு சபையால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26ம் தேசிய அரசியலமைப்புச் சட்ட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இ-நீதிமன்ற திட்டங்களான மெய்நிகர் நீதி நடைமுறை வசதி,   ஜஸ்ட்ஐஎஸ் மொபைல் ஆப் 2.0 (JustIS mobile App 2.0), டிஜிட்டல் நீதிமன்றம் மற்றும் எஸ்3 டபிள்யூஏஏஎஸ் இணையதளங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

விழாவில் பேசிய பிரதமர், அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்ட தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். 1949ஆம் ஆண்டு இதே நாளில் சுதந்திர இந்தியா தமது புதிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என்றார். விடுதலையின் அமிருதப்பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், நாம் அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடுவது, முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாஹேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த நேரத்தில் மரியாதை செலுத்துகிறேன் என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விரிவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சிப் பாதையில் கடந்த 70 ஆண்டுகளாக, சட்டப்பேரவை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையைச் சேர்ந்த எண்ணிலடங்கா தனிநபர்களின் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். அரசியலமைப்புச் சட்ட தினத்தை நாடு கொண்டாடும் இவ்வேளையில், மனிதாபிமானத்திற்கு எதிரானவர்களால் நடத்தப்பட்ட மாபெரும் தீவிரவாதத் தாக்குதலை இந்தியா எதிர்கொண்ட, இந்திய வரலாற்றில் கருப்புத் தினமான,  நவம்பர் 26ம் தேதியையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  பேரழிவை ஏற்படுத்திய மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு திரு  மோடி மரியாதை செலுத்தினார்.

தற்போதைய சர்வதேச சூழ்நிலையிலும், பொருளாதார வளர்ச்சியில் பீடு நடைபோடும் இந்தியாவை, சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முறியடித்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமிதப் பாதையில், இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் கூறினார். இந்த வெற்றி அரசியலமைப்புச் சட்டத்தையே சாரும். அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இடம் பெற்றுள்ள முதல் மூன்று வார்த்தைகளான மக்களுக்காக நாம் என்ற அழைப்பே மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் உறுதிமொழியை வெளிப்படுத்துகிறது என்பதை பிரதமர் மேற்கோள் காட்டினார்.  அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சமே, இந்தியாவின் சாராம்சம். அது என்னவென்றால், இந்தியா தான் உலக நாடுகளுக்கு ஜனநாயகத்தின் தாயாக உள்ளது என்பது என தெரிவித்தார்.  நவீன காலத்தில், தேசத்தின் அனைத்து கலாச்சாரம் மற்றும் நீதி உணர்வுகளை உள்ளடக்கியதாக அரசியலமைச்சட்டம் மாறியுள்ளது.

ஜனநாயகத்தின் தாயாக திகழும் இந்தியா, அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சியங்களுக்கும், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் மக்கள் நல கொள்கைகளுக்கும் வலுசேர்த்து வருவதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply