வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு.

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாள் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் தொடக்கமாக நமது இந்திய அரசியலமைப்பின் முகவுரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது.  இந்த ஆண்டு அரசியலமைப்பு தினத்தின் கருப்பொருளான, “இந்தியா – ஜனநாயகத்தின் தாய்” சம்பந்தமாக சிறந்த வாசகம் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், இந்திய அரசியலமைப்பு குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

மத்திய அமைச்சகம் சார்பில் இந்தியா மற்றும் இந்திய அரசியலமைப்பு சம்பந்தமாக விநாடி வினா போட்டி நடத்தினர். இதுதவிர மத்திய பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு தொடர்பான சுவரொட்டிகள், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.  

திவாஹர்

Leave a Reply