பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா நெறிமுறைகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிராந்திய மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தியா நெறிமுறைகளுடன் கூடிய வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்தோ- பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை நிகழ்வில் தலைமை உரையாற்றிய திரு. ராஜ்நாத் சிங், “கடந்த ஜுன் 2018-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற சங்ரி-லா பேச்சுவார்த்தை நிகழ்வின் போது இந்தோ-பசிபிக் தொடர்பான நம் நாட்டின் தொலைநோக்கு பார்வை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள், அமைதியின்மை போன்றவைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை அமையும்.

அண்மையில் பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் போது 'போர் சகாப்தம் முற்றுபெற்று விட்டது' என்று பிரதமர் வலியுறுத்தி கூறினார். இந்த கூற்றையே அனைத்து உலகத் தலைவர்களும், போர்கள் மற்றும் முரண்பாடுகளைத் துறந்து உலகளாவிய பிரச்சனைகளான காலநிலை மாற்றம், கொவிட்-19 பெருந்தொற்று போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தி அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றனர் என்று கூறினார். “வர்த்தக நடவடிக்கைகளிலும், உள்கட்டமைப்பு தொடர்பான முன்முயற்சிகளிலும் கவனம் செலுத்தி நட்புறவுடன் செயல்பட்டால் இரண்டு நாடுகளுக்கு இடையே பொதுவான நன்மை ஏற்படும்.

“இந்தோ- பசிபிக் பெருங்கடல் முன்முயற்சிகள்” நடவடிக்கைகளுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பாதுகாப்பு சூழ்நிலைகளுடன் கூடிய உலகை உருவாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இந்தியப் பாரம்பரிய மரபு மற்றும் நன்னெறிக் கோட்பாடுகளின் அடிப்படையில் மக்களிடைய சமத்துவம் மற்றுமகௌரவம் போன்றவற்றை பின்பற்றியே நமது நாட்டின் செயல்பாடுகள் அமையும்” என்றார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply