கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்வரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் இன்று தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர், தொகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் 4.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியில் 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடலை திறந்துவைத்தார். பின்னர் முதல்வர் பூப்பந்தாட்டம் விளையாடினார்.

இதைத் தொடர்ந்து பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 8.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ள 37 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பள்ளி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 4.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பு கட்டும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply