காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்கள் குழு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் குழு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அந்த மாணவர்கள் குழு பிரயாக்ராஜ் நகரத்திற்கு சென்றபோது, அவர்கள் ‘ஹரஹர மகாதேவ’, ‘பாரத் மாதா கீ ஜே’ போன்ற கோஷங்களை மிகுந்த உற்சாகத்துடன் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் குழுவை பிரயாக்ராஜ் நகர மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின், அந்த மாணவர்கள் குழு சங்கம் நதிக்கரையில் அமைந்துள்ள அனுமன் ஆலயத்திற்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் ஸ்ரீ ஆதிசங்கர் விமான மண்டபத்திற்கும் சென்றனர்.

அந்த மாணவர்கள் குழுவிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிலர் அந்த மாணவர்கள் குழுவினரோடு இணைந்து அவர்கள் விருப்பப்படும் பகுதிகளுக்கு சென்றனர். குறிப்பாக, அந்த மாணவர்கள் குழு அக்ஷயவத் (அழிவற்ற ஆலமரம் – இந்து மத நம்பிக்கை அடிப்படையில் அது ஒரு புனித மரமாகும்), சந்திரசேகர் ஆசாத் பூங்கா, பிரயாக்ராஜ் அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ சுவாமி நாராயணன் ஆலயம் போன்ற இடங்களுக்கு சென்றனர். அந்த குழுவினர் தங்கள் பயணத்தின் நிறைவாக புனித நகரமான அயோத்தியாவுக்கு சென்றனர்.

தமிழக மாணவர்கள் குழுவினர் அயோத்திக்கு செல்வதற்கு முன்பாக, தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் செல்லும் இடங்களை பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த தமிழ் தெரிந்தவர்கள் அக்குழுவினருடன் சென்றதால் அவர்களுக்குள் மொழி பிரச்சினை ஏற்படவில்லை.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply