புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்றார்.

இந்தியாவின்  புதிய தேர்தல் ஆணையராக திரு அருண் கோயல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, தற்போது நேபாள நாடாளுமன்ற தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக சென்றுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த திரு அருண் கோயல்

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின்  சர்ச்சில் கல்லூரியில் வளர் பொருளாதாரப் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். கணிதவியல் பாடத்தில் எம்எஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.  மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம், கலாச்சாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் செயலாளராக பணிபுரிந்துள்ளார். தில்லி வளர்ச்சி ஆணையத்தில் துணைத்தலைவராகவும், மத்திய நிதி அமைச்சகத்தில்  வருவாய் துறை பிரிவில் இணைச் செயலாளராகவும் பணி புரிந்துள்ளார். அத்துடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திலும்  இணைச் செயலாளராகவும் அவர் பணி புரிந்துள்ளார். பஞ்சாப்  மாநிலத்தில் மின்சாரம், பாசனம்,  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,  செலவினத் துறையில் செயலாளராகவும் திரு அருண் கோயல் பணிபுரிந்துள்ளார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply