இந்திய அரங்கில் நடைபெற்ற, மாறுபட்ட சூழல் மற்றும் மாறுபட்ட சூழலுக்கு இந்தியாவின் தயார்நிலை மீது நீண்ட கால உத்தி குறித்த அமர்வில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் பங்கேற்றார்.

சிஓபி 27-ன் இந்திய அரங்கில் இன்று எரிசக்தி மற்றும் ஆதாரவாளங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த,  ‘மாறுபட்ட சூழல்  மற்றும் மாறுபட்ட சூழலுக்கு இந்தியாவின் தயார்நிலை’ மீது நீண்ட கால உத்தி குறித்த அமர்வில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் திருமதி லீனா நந்தன் சிறப்புரையாற்றினார்.

மாறுபட்ட சூழலுக்கான நிதியின் இன்றியமையாத தேவையை அடிக்கோடிட்டுக் காட்டிய செயலாளர் திருமதி லீனா நந்தன், வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான உலகளாவிய அடிப்படையை உருவாக்குவது மாறுபட்ட சூழல் தயார்நிலையை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.

90 சதவீத பேரழிவுகள் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை என்பதை சுட்டிக்காட்டிய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பேரிடரைத் தாங்கவல்ல அடிப்படைக் கட்டமைப்புக்கான கூட்டணியின் நிர்வாகக் குழுவின்  இந்திய இணைத் தலைவருமான  திரு கமல் கிஷோர், பேரிடர் அபாயத்தைக் குறைப்பது மாறுபட்ட சூழல் பணிகளின் தகவலாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார். சிறந்த முன்னறிவிப்பு அமைப்புகளுடன், சமூகங்களுடனான ஆழ்ந்த ஈடுபாடும்  பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கு முக்கியமாகும் என்று திரு கிஷோர் கூறினார். இடர் மதிப்பீடுகளைப்  புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 

இந்திய அரங்கில் நடைபெற்ற, மாறுபட்ட சூழல் மற்றும் மாறுபட்ட சூழலுக்கு இந்தியாவின் தயார்நிலை மீது நீண்ட கால உத்தி குறித்த அமர்வில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் பங்கேற்றார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply