மருத்துவம், தொழில்நுட்பக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும்!-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மருத்துவம், தொழில்நுட்பக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்விகற்கும் மாணவ, மாணவிகள் தங்களது தாய் மொழியில் கற்பதற்கு ஏற்ற வகையில்,  பல மாநில அரசுகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. அந்த நோக்கத்தின் முழுமையான பலன்களை மாணவர்கள் பெறத் தொடங்கியுள்ளனர் என்றும், தமிழ்நாட்டிலும் அத்தகைய நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகில் மிகவும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாப்பதும், வளர்ப்பதும் இந்த தேசத்தின் பொறுப்பாகும்” என்றார்.

மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில்  1,350  இடங்களுக்கு தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய தரவின் படில்  50 இடங்களுக்கு மட்டுமே தற்போது தமிழ் பயிற்று மொழியாக இருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

“மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுத்தால், மொழியின் வளர்ச்சிக்கு இது ஒரு மிகப்பெரிய சேவையாக அமையும்,” என்று அவர் கூறினார்.

தமிழகம் முதலீடுகளை ஈர்க்க மிகப்பெரிய வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர்  திரு அமித் ஷா கூறியுள்ளார்.

“தமிழகத்தின் மீது மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்”. “தமிழகத்தின் முன்னுரிமை துறைகளின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி அரசு அபார கவனம் செலுத்தி வருகிறது’’ என்று திரு அமித் ஷா கூறினார்.

2009 முதல் 2014 வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில், தமிழகம் ரூ.62,000 கோடியை  வரிப்பங்காக பெற்றது. ஆனால், தற்போது அது ரூ.1,19,455 கோடியாக அதிகரித்துள்ளது. இது 91% அதிகமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மாநிலம் ரூ.35,000 கோடி மானிய உதவி பெற்று வந்தது. இப்போது ரூ.95,734 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், அது 171% அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

2009-10-ல் தமிழகம் ரூ.928 கோடியை நிதி ஆணையத்தின் மானியமாக பெற்றது என்று கூறிய அவர், இது நரேந்திர மோடி ஆட்சியில் ரூ.6,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஹோசூர் ஆகியவற்றை இணைக்கும், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக, தமிழக பாதுகாப்பு துறையில், முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரதமர் வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

‘’ தமிழகத்தில் தேசிய நெடுசாலை கட்டமைப்புக்கு அரசு ரூ.8700 கோடி செலவழித்துள்ளது. இதேபோல, 2,800 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க பாரத்மாலா திட்டத்தின் கீழ்  ரூ.91,570 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், 64 கூடுதல் திட்டங்களுக்கு ரூ.47,589 கோடி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’’  என்று அவர் கூறினார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply