ராஜா ராம் மோகன் ராயின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாட்டிய நாடகம்.

நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் ராஜா ராம் மோகன் ராயின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நாட்டிய நாடகம், கடமைப்பாதை (கர்த்தாவியா பாத்) மற்றும் இந்தியா கேட்டில் (சென்ட்ரல் விஸ்டா) இன்றும், நாளையும் (நவம்பர் 5 மற்றும் 6)   நடைபெற உள்ளது. ராஜா ராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளையால் நடத்தப்படும் ‘யுகபுருஷர் ராஜா ராம் மோகன் ராய்’ என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சி, ‘பெண்களுக்கு மரியாதை’ என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ராஜா ராம் மோகன் ராயின் 250-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம், மத்திய கலாச்சார அமைச்சகம் ஓராண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

சென்ட்ரல் விஸ்டாவில் ஒவ்வொரு வரமும் நடைபெறும் கலாச்சார விழாக்களின் கீழ் இந்த ஒலி- ஒளி நிகழ்ச்சி நடத்தப்படும். 40 கலைஞர்களை உள்ளடக்கிய இந்த நாட்டிய நாடகம், பிரபல நடன இயக்குநர் திரு நீலே சென்குப்தாவால் இயக்கப்பட்டுள்ளது.

ராஜா ராம் மோகன் ராயின் போற்றத்தக்கப் பணிகள், உயரிய கொள்கைகள் மற்றும் தத்துவத்தை பார்வையாளர்களிடம் இந்த நாட்டிய நாடகம் பரவலாகக் கொண்டு செல்லும். மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம்.

எம்.பிரபாகரன்

Leave a Reply