கூட்டு நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வலுப்படுத்த வேண்டும்!-தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே.

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேர்தல் ஒருமைப்பாடு’ குறித்த கூட்டு செயல்பாட்டுக்கான நடவடிக்கையாக, ‘தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பங்கு, கட்டமைப்பு மற்றும் திறன்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச மாநாட்டின் நிறைவு விழாவிற்கு தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே இன்று தலைமை வகித்தார்.

நிறைவு விழாவில் பேசிய தேர்தல் ஆணையர் திரு. அனுப் சந்திர பாண்டே தனது உரையில், தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்றாலும்,  தேர்தல்களை நடத்தும்போது சவால்களை எதிர்கொள்வதிலும் சுதந்திரத்தைப் பேணுவதைப் பொறுத்தும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் செயல்பாட்டுத் திறன் உள்ளது என்றார். ஜனநாயக விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்தவும், கூட்டு நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்து தளங்களையும் மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தேர்தல் மேலாண்மை அமைப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.

உலக அளவில் தேர்தல் அமைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மை போன்ற வளர்ந்து வரும் சவால்களை எடுத்துரைத்த தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே, இந்த சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பு, தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் அறிவாற்றல் தகவல் பகிர்வு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தினார். வாக்காளர் பட்டியல் மேலாண்மை, வாக்குப்பதிவு மேலாண்மை, தேர்தல் தொழில்நுட்பம், தவறான தகவல்களைக் களைதல், போலிச் செய்திகளை ஒழித்தல், இணையப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து அம்சங்களிலும் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பாக செயல்படும் விதத்தில் மேலும் மேலும் ஜனநாயகங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். தேவைப்படும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் மேம்பாட்டுக்காக கூட்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த இரண்டு நாட்களில், மூன்று அமர்வுகளில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.

‘தேர்தல் ஒருமைப்பாடு” என்ற அம்சத்தை உறுதி செய்வதற்கு தேர்தல் அமைப்புகளின் பங்கு மற்றும் கட்டமைப்பு தொடர்பாக நடைபெற்ற, “தேர்தல் மேலாண்மை அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள்” என்ற தலைப்பிலான முதல் அமர்வு மொரீஷியஸின் தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மெக்சிகோ, சிலி, நேபாளம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள தேர்தல் அதிகாரிகளின் விளக்க உரைகள் இடம்பெற்றன.  சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான தேர்தலுக்காக, தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் முன்முயற்சிகளைப் பாராட்டி முதல் அமர்வு நிறைவு பெற்றது. ஒருவருக்கொருவர் மேற்கொள்ளும் நல்ல நடைமுறைகளில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ளும் வகையில் இது அமைந்தது.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் கிரீஸ்சின் ஹெலனின் குடியரசின் 

தேர்தல் இயக்குனரகத்தின் தலைவர் ஆகியோர், “எதிர்கால சவால்கள்” என்ற தலைப்பிலான இரண்டாவது அமர்வுக்கு தலைமை வகித்தனர் என்றார். ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் இந்த அமர்வில் உரையாற்றினர். டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின்  சுமூகமான செயல்பாடுகள் போன்றவை தொடர்பாக இந்த அமர்வில் விவாதிக்கப்பட்டது.

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் திறன் என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வுக்கு  தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தலைமை வகித்தார். இந்த அமர்வில், இலங்கை  மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளை தலைவர்கள் மற்றும் ஐநா வளர்ச்சித்திட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் தலைவர் பேசுகையில், பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றார். தேர்தல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ஒருவருகொருவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார். தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தவறான தகவல்கள், திரித்துக்கூறப்படும் தகவல்கள், உள்ளிட்ட அச்சுறுத்தல்களை அடையாளம் காணவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தேர்தல் வேளாண்மை அமைப்புகளின் திறன். அதிகாரம் மற்றும் பொறுப்புகள் ஆகியவை  தேவைக்கேற்ப மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் அமர்வில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

திவாஹர்

Leave a Reply