மழைநீர் வடிகால் அமைக்கும் பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட உயிரிழப்பு இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னை , ஜாபர்கான்பேட்டையில் புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து , அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் . மழைநீர் வடிகால் அமைக்குப்பணி சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது .

பல இடங்களில் பணி முற்றுப் பெறாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றது . அவற்றால் உயிருக்கு பாதுகாப்பு இன்மை குறித்து கடந்த மாதங்களில் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு தமிழ் மாநில் காங்கிரஸ் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது . ஆனால் தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் மெத்தன போக்கால் இன்று விலை மதிப்பற்ற உயிரை பலிகொடுத்துள்ளோம் . பலியான முத்துகிருஷ்ணனை நம்பி அவர்கள் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும் .

மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் இந்த பலியே முதலும் முடிவுமாக இருக்கட்டும் . ஆகவே தமிழக அரசும் , சென்னை பெருநகர மாநகராட்சியும் உடனடியாக சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் . பணிகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் .

திரு . முத்துகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல . இளம் வயதில் தன் மகனை இருக்கும் அக்குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் . பறிகொடுத்த பத்திரிகையாளர் திரு . முத்துகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் , உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply