எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி தீபாவளியை கொண்டாடினார்.

நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கார்கில் சென்றார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை அவர் வழங்கினார். அதன்பின் ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது;- பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது. அதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். நான் இங்கு வந்தபோது ராணுவ வீரர்களுடன் நான் இருக்கும் என்னுடைய பழைய புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதற்காக நான் அவர்களுக்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன்.ராணுவ வீரர்கள் என்னுடைய குடும்பத்தினர். உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தீபாவளி பண்டிகை இனிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

கார்கில் போரை நான் நினைத்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கடமைதான் என்னை அப்போது கார்கிலுக்கு அழைத்து வந்தது. வெற்றியின் ஓசைகள் எங்கும் எதிரொலித்த அந்தக் காலத்தின் பல நினைவுகள் உள்ளன.மக்கள் அன்று கொண்டாடப்பட்ட தீபாவளியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள், கடந்த எட்டு ஆண்டுகளாக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும். ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்கும் போதுதான் ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும். இந்தியா தனது வெளி மற்றும் உள் எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது. பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்தை நாட்டிற்குள் இருந்து வேரோடு பிடுங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது.இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்க்கவில்லை. நாம் எப்போதும் இறுதி முயற்சியாக போரைப் பார்த்திருக்கிறோம். நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது. எங்கள் ஆயுதப் படைகளுக்கு வியூகங்களும் வலிமையும் உள்ளன.

யாரேனும் நம் மீது தீய நோக்கத்தோடு பார்வையை செலுத்தத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமது முப்படைகளுக்கும் நன்றாகத் தெரியும்.தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆத்மநிர்பர் பாரத் மிக முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளில் வெளிநாட்டு சார்பு குறைவாக இருக்க வேண்டும் என கூறினார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாட பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று வருகிறார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி ஜம்முவில் உள்ள நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். இந்திய எல்லையில் பணியாற்றும் வீரர்களை பாராட்டிய அவர், பாதுகாப்பு வீரர்கள் தேசத்தின் கவசம் என்று சுட்டிக்காட்டினார்.

திவாஹர்

Leave a Reply