பாதுகாப்புத்துறை நாடு முழுவதும் உள்ள அதன் கள அலுவலகங்களில் தூய்மை சிறப்பு பிரச்சாரம் 2.0-ஐ மேற்கொள்கிறது.

பாதுகாப்புத் துறையின் புதுதில்லி அலுவலகங்கள் மற்றும் கள அலுவலகங்களில் தூய்மை சிறப்புப் பிரச்சாரம் 2.0-ஐ அக்டோபர் 02-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகள், பிரச்சார கால நடவடிக்கையாக செப்டம்பர் 14 முதல் 30 வரை  நடத்தப்பட்டன. இந்த ஆண்டு, கள/வெளியூர் அலுவலகங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரமானது துறையின் கீழ் உள்ள அலுவலகங்களில் போதிய இடங்களை வழங்குவதுடன், சேவை வழங்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிறப்புப் பிரச்சாரத்தின் தொடக்கமாக பாதுகாப்புத்துறை தூய்மை இயக்கத்தை நாடு முழுவதும் 4569 இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவையில் உள்ள 134 குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன், மாநில அரசுகளின் 30 பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் அலுவலகத்தின் 13 நிலுவை குறிப்புகளுக்கும், பொது மக்களின் 445 குறைபாடுகளுக்கும் இந்த காலகட்டத்தில் தீர்வு காணப்பட்டது. 22,350 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 9954 கோப்புகள் இதுவரை  முடிக்கப்பட்டுள்ளன. வீணான பொருட்கள் விற்பனை மூலம் ரூ.6,05,005 திரட்டப்பட்டுள்ளதுடன், 7475 சதுர மீட்டர் இடம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

 பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தூய்மை இந்தியா இயக்கம், தூய்மையை வாழ்வியல் பாடமாக போதித்த தேசப் பிதா மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மக்கள் இயக்கமாக மாறியது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு பிரச்சாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2022 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள், இணைக்கப்பட்ட / துணை அலுவலகங்களில் தூய்மை குறித்த சிறப்பு பிரச்சாரம் 2.0-க்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

திவாஹர்

Leave a Reply