நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 900 மில்லியன் டன் என்ற அளவை எட்டவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி 900 மில்லியன் டன்னை எட்டும் என்றும், இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கனிம ஆய்வு விதிமுறைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டதாகவும், இதுவரை ஒன்பது தனியார் ஆய்வு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  இந்திய தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிம மற்றும் எரிசக்தி வளங்கள் மீதான சொத்துக் கணக்குகளின் தொகுப்பை” வெளியிட்டார்.   உரையாற்றிய அமைச்சர் திரு ஜோஷி, தற்போதைய வணிக நிலக்கரிச் சுரங்க ஏல நடைமுறையை முற்றிலும் வெளிப்படையானதாகவும், நிறுவன மயமாக்கி உள்ளதாகவும் கூறினார். நிலக்கரி இறக்குமதி தொடர்ந்து குறைந்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டுக்குள் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply