மத்திய மறைமுக வரிகள் வாரியம் சார்பாக இரண்டாவது கட்ட சிறப்பு தூய்மை பிரச்சாரம்.

அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் ‘நிலுவையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டத்தில்’ மத்திய மறைமுக வரிகள் வாரியம் மிகுந்த ஈடுபாடுடன் பங்கேற்று வருகிறது. முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பிரச்சாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் பரிந்துரைகளில் 23 (மொத்தம் 44), 722க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைகள், சுமார் 120 பொதுமக்கள் குறை மேல்முறையீடுகள் ஆகியவை இதுவரை தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் அனைத்து கள அலுவலகங்களிலும் தேசிய சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 1344 பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

2021-22 இல் ஏறத்தாழ 5.8 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 3.8 லட்சம் கோப்புகள் இறுதியில் அகற்றப்பட்டன. வாரியத்தின் தொடர் முயற்சிகளின் காரணமாக அலுவலகப் பணிகள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. இதனால் கோப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, அவற்றை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை தோராயமாக 64,000 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் சுமார் 20,000 கோப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன.

தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கும் கவனம் செலுத்தப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டில் சுமார் 37,000 சதுர அடியில் தேவையற்ற பொருட்கள் நீக்கப்பட்டன. இந்த ஆண்டு ஏற்கனவே 22,000 சதுர அடியிலான பொருட்கள் அகற்றப்பட்டிருப்பதோடு, கூடுதல் இடத்தை காலி செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply